அதிரிபுதிரியாக ஆஸ்பத்திரியை காலி செய்த ஈரோடு மாவட்டம்: இன்னும் 4 பேர் தான் இருக்காங்க

கொரோனாவை முதல்கட்டமாகவே எதிர்கொண்டு பெரிய பிரச்சினைகளை சந்தித்தது ஈரோடு மாவட்டம் தான். இங்கு இருந்த கொரோனா தொற்றின் பரவல் வேகத்தை கண்டு தமிழ்நாடே மலைத்து போய் இருந்தது. 



விறுவிறுவென 70 என்ற அளவில் எண்ணிக்கையை உயர்த்தி, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடி அதிக நோயாளிகள் இருந்தது ஈரோடு மாவட்டம்.



இந்த மாவட்டத்தில் இன்னும் 4 பேர் தான் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேறு வழியில்லை நம்பித்தான் ஆக வேண்டும்.


இன்று அதிரிபுதிரியாக அத்தணை பேருக்கும் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி ஆஸ்பத்திரியை காலி செய்து வருகிறது.


கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 32 பேர் சிகிச்சையில் நோய் மீண்டு வீட்டுக்கு சென்ற நிலையில், இன்று 28 பேரை குணமடையச் செய்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.


சிறப்பாக செயல்பட்டு, கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி, வெற்றி கொள்ளும் மாவட்டம் ஈரோடு தான். அந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள், போலிஸ் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையிலான போலீசார், மருத்துவத்துறைய்யினர் உள்பட அனைத்து அரசுத்துறையினரும் தான். 


இன்னும் சில நாட்களில் இருக்கும் 4 பேரையும் குணமாக்கி அனுப்பி விட்டு வெற்றிவாகை சூட இருக்கிற ஈரோடு மாவட்ட அரசு நிர்வாகத்தை அனைவரும் பாராட்டலாமே!


 


--------------------------------------------------------------


துணைக்கட்டுரை:


கொரோனாவோட ஸ்மெல் கூட வெளில வரக்கூடாது: அக்கு அக்காக பிரிச்சு.. எல்லைகள அடைச்சு.. வைரசையே வாழ விடாமல் துரத்திய ஈரோடு மாவட்டம்


https://tamilanjal.page/T2D0GA.html


 


 


Previous Post Next Post