திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி தேரோட்டம் !

திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி மாத தேரோட்டம் .

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில்

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும்,சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் பாடல்பெற்ற திருத்தலம், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்த திருமுருகநாத சுவாமி கோயிலில் மாசி மாதம் தேர்த் திருவிழா மார்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவ மூர்த்திகள்  திருவீதி உலா நடைபெற்றன.

கடந்த பத்தாம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது தொடர்ந்து நேற்று

முக்கிய நிகழ்வான   திருத்தேரோட்டத்தில்  திருமுருகநாதேஸ்வரர்,

சோமாஸ்கந்தர் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்  பாலித்தார்,தொடர்ந்து திருத்தேரினை பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் இழுக்க  தொடங்கிய போது  கனமழை பெய்ததால் தேரானது பத்தடி தூரம் மட்டும் இழுத்து நிறுத்தப்பட்டது,

இன்று  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை இழுத்து நமச்சிவாய கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர், 

இந்த தேரோட்டத்தின் போது சிவகன பூத வாத்தியம் இசைத்த சிவனடியார்கள்,பக்தர்கள் சங்கு நாதம் இசைத்து திரளாக கலந்து கொண்டனர்,



தொடர்ந்து சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த ஸ்ரீ சுந்தரர் வேடுபரி திருவிழாவும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது கூப்பிடு விநாயகர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடைபெற உள்ளது

Previous Post Next Post