பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி... 21 பேர் படுகாயம்!

திருப்பூரில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தார்கள். 


இந்த நிலையில் இந்த பேருந்து கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம்  வரும்போது, ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்தது. 


இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களான பெரியசாமி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தவிர 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 



படுகாயம் அடைந்த அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்துள்ளனர். 


 இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.  

Previous Post Next Post