ஆளை மயக்கும் அகஸ்தியர் மலைக்காடு! மலை ஏற்றத்துக்கு நாளை முன்பதிவு தொடக்கம்!

 மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியமான மலையேற்றமாக கருதப்படுவது அகஸ்தியர் மலை மலையேற்றம் ஆகும். தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள களக்காடு முண்டன் துறை பகுதி முக்கிய புலிகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டு வழியில் அகஸ்தியர் மலையேற்றம் தடை செய்யப்பட்டு உள்ளது. இப்போது கேரளத்தின் திருவனந்தபுரம் வழியாக மட்டுமே இந்த மலையேற்றம் செல்ல முடியும்.


2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புத மூலிகைகள், ஆளை மயக்கும் வனப்பகுதி, நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காலநிலை, இதையெல்லாம் தாண்டி மலை உச்சியில் இருக்கும் அகஸ்திய மாமுனியை காண ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியா முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள். 
அகஸ்தியர்கூடம் சிகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நுழைவது கேரள வனத் துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. வனத் துறையால் வழங்கப்படும் அனுமதியை பெற்று அவர்களுடைய வழிகாட்டுதலுடன் மட்டுமே இந்த மலையேற முடியும். 

அகஸ்தியர் மலையேற்றம் 3 நாள் கொண்ட கடினமான மலைஏற்றம் ஆகும். முதல் நாள் போனாக்காடு வன சோதனைச்சாவடியில் புறப்பட்டு, வனப்பகுதிக்குள் 16 கி.மீ தொலைவில் உள்ள அத்திரமலை அடிவார முகாமுக்கு மாலைக்குள் சென்றடைய வேண்டும். அங்கு இரவு தங்கி அடுத்த நாள் அகஸ்தியர்கூடத்திற்கு 8 கிமீ செங்குத்தான மலையேற்றம் அடுத்த நாள் அதிகாலையில் தொடங்கும்.  மேலும் பயணிகள் மாலை நேரம் பேஸ் ஸ்டேஷனுக்குத் திரும்ப முடியும்.
இந்த மலையேற்றத்துக்கு முன்பதிவு அறிவிப்பினை கேரள வனத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 20-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ம் தேதி வரை மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. www.forest.kerala.gov.in மற்றும் serviceonline.gov.in/trekking  ஆகிய வலைத்தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் 2700 நிர்ணையிக்கப்பட்டு உள்ளது. அக்ஷ்ய கேந்திராக்கள்.  ஏதேனும் ஒரு அடையாள அட்டை  தேவைப்படும். 

இதில் ஜனவரி 20 முதல் 31 வரையான தேதிகளில் மலையேற, நாளை அதாவது 08-01-2024 காலை 11.00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. 
பிப்ரவரி 01 முதல் 10 வரையிலான மலையேற்றத்துக்கு  21-01-2024 காலை 11.00 மணிக்கு  முன்பதிவு தொடங்குகிறது.
பிப்ரவரி 11 முதல் 22 வரை யிலான மலையேற்றத்துக்கு 03-02-2024 காலை 11.00 மணிக்கு  முன்பதிவு தொடங்குகிறது.

இதுதவிர நேரில் சென்றும் முன்பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  +91-471-2360762 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

Previous Post Next Post