தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மேற்கு மண்டல ரயில் பாதையில், ரயில் நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் கேரளாவுக்கு அதிகமாக வழங்கி விட்டு, தமிழ்நாட்டு மக்களை தென்னக ரயில்வே வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நான்கைந்து நிறுத்தங்கள் மட்டும் நிறுத்தப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட, கேரளாவில் 16க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாகவும் இதனால் தமிழக மக்கள் ரயில்களில் இடம் கிடைக்காமல் திண்டாடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிழக்கு கடற்கரையான தமிழ்நாட்டில் இருக்கிற சென்னையில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள கேரள மாநிலத்தின் ஒவ்வொரு சிறிய ஊர்களுக்கும் தென்னக ரயில்வே திட்டமிட்டு ரயில்களை இயக்குகிறது. சென்னையிலிருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் ரயில்கள் அங்கிருந்து சொரனூர், திரூர், கோழிக்கோடு வழியாக வடக்கு கேரளாவுக்கும், திரிச்சூர், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் வரை தென்கேரளாவுக்கும் இயக்கப்படுகி ன்றன.
தமிழ்நாட்டின் சென்னையில் இருந்தும், ஆந்திராவின் திருப்பதியில் இருந்தும், கர்நாடகாவின் மைசூர் பெங்களூருவில் இருந்தும் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர்ஃபாஸ்ட், பாசஞ்சர் என ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து கேரளத்தின் பாலக்காட்டுக்கு 90 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர், திருப்பதி என பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவாக நிறுத்தம் இல்லை. அதே ரயில் கேரளாவுக்குள் செல்லும் போது 7 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர், 20 கிலோமீட்டர் என்று பாசஞ்சர் ரயில் போல மாறி விடுகிறது.
சென்னையில் இருந்து புறப்பட்டு கேரளாவின் திருவனந்தபுரம் செல்லும் 12623 என்ற எண்ணுடைய திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர், அரக்கோணத்தில் கூட நிற்காமல் 129 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. காட்பாடியில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, மொரப்பூர், பொம்மிடி ரயில்நிலையங்களை தவிர்த்து விட்டு, அடுத்த 100 கிலோமீட்டர் தூரம் நிற்காமல் சேலத்தில் தான் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து ஈரோட்டில் நிறுத்தினால் பிறகு தொழில் நகரமான திருப்பூர ரயில் நிலையத்தையே தவிர்த்து விட்டு, நேரடியாக கோவையில் நிறுத்தப்படுகிறது. இப்படி இந்த ரயில் சென்னையில் இருந்து கோவை வரைக்கும் 494 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கே ரயில் நிலையங்களில் தான் நிறுத்தப்படுகிறது. ஆனால் அதே ரயில் கேரளாவுக்குள் சென்று விட்டால் நிலைமையே வேறுதான்.
பாலக்காடு, திரிச்சூர் என்ற முக்கிய ரயில் நிலையங்களை கடந்து அங்கமாலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலுவா, ஆலுவாவில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் எர்ணாகுளம், எர்ணாகுளத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில்திருப்புணித் துறா ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் இதே ரயில் கோட்டையம், கோட்டையத்தில் இருந்து சங்கனச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவெலிக்கரா, காயங்குளம், கொல்லம், வர்க்கலா, திருவனந்தபுரம் தெற்கு, வடக்கு என சாதாரண பாசஞ்சர் ரயில் போல நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள். சென்னையில் இருந்து கோவை வரை 494 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கே நிறுத்தங்களில் நிறுத்தப்படும் இந்த ரயில் கேரளத்திற்குள் 424 கிலோ மீட்டர் தூரத்துக்கு 16 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது.
இப்படி சென்னையில் இருந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இல்லாமல், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக செல்லக்கூடிய எல்லா ரயில்களுக்குமே இதே கதிதான். மஹாராஷ்ட்ராவின் சந்திரபூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து சேலம், ஈரோடு கோவை வழியாக கேரளத்தின் திருவனந்தபுரம் செல்கிற 12511 எண் கொண்ட ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்சுக்கு 494 கிலோமீட்டர் தூரம் ஓடுகிற தமிழ்நாட்டில் 6 நிறுத்தங்கள், 424 கிலோமீட்டர் தூரம் இயங்குகிற கேரளத்தில் வடக்கஞ்சேரி, இரிஞ்சாலக்குடா, சாலக்குடி என குட்டி குட்டி ரயில் நிலையங்கள் எல்லாம் சேர்த்து 10 நிறுத்தங்கள் நிறுத்தப்படுகிறது. 22645 என்ற எண் கொண்ட அகில்யாநகரி எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தலா 350 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரயிலுக்கு காட்பாடி, சேலம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டில் 6 நிறுத்தங்கள் தான். கேரளத்திலோ 17 நிறுத்தங்கள் நிறுத்தப்படுகிறது. 12685 என்ற எண் கொண்ட மங்களூரு எக்ஸ்பிரசுக்கு தமிழ் நாட்டில் 8 நிறுத்தங்கள், கேரளத்தில் 12 நிறுத்தங்கள். 12626 என்ற எண் கொண்ட டெல்லி செல்லும் கேரள எக்ஸ்பிரஸ்சுக்கு தமிழ்நாட்டில் 6 நிறுத்தங்கள், கேரளத்தில் 16 நிறுத்தங்கள். என கேரள மக்களுக்கு எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர்ஃபாஸ்ட் என எல்லா ரயில்களுமே பாசஞ்சர் ரயில் போல நின்று தான் செல்கின்றன.
கேரளத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல’ சிறிய ரயில் நிலையங்களில் கூட சக்திவாய்ந்த சூப்பர் பாஸ்ட்கள் நிறுத்தப்படுகிறது. வைக்கம் ரோடு - ஒரே ஒரு நடைமேடை உள்ளது. கேரளா எக்ஸ்பிரஸ் நிறுத்துகிறது. வடக்கஞ்சேரி, திருப்பூண்டித்துறை, கருநாகப்
போதாக்குறைக்கு தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் கூட பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. 12623 சென்னை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 16526 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 12257 கரீப் ரத் எக்ஸ்பிரஸ், 22877 அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், 22837 தாத்ரி எக்ஸ்பிரஸ், 22207 திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 16317 காஷ்மீர் செல்கிற ஹிம்சாகர் உள்பட பல ரயில்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கூட நிறுத்தப்படாமல் செல்கிறது. இப்படி அபரிமிதமாக வழங்கப்பட்ட நிறுத்தங்கள், ரயில்கள் என தேவைக்கும் மேல் வசதிகள் செய்து தருவதால் இந்த ரயில்கள் எல்லாவற்றிலும் ஈரோடு, திருப்பூர், கோவையில் பயணிகள் எல்லாம் கடும் நெருக்கடியில் வந்து இறங்கிய பின்னர் கேரளத்துக்குள் காலியாக செல்லும் ரயில்களை பார்த்து தமிழக மக்கள் வேதனை அடைகிறார்கள்.
இப்படி அதிக நிறுத்தங்களில் நிற்கச்செய்வது மட்டும் இல்லாமல், கேரள ரயில் நிலையங்களுக்கு அதிக சீட்களும் வழங்கப்படுவதாக தமிழ்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டு தண்டவாளங்களில் அதிக தூரம் இயக்கப்பட்டாலும் கேரளாவுக்கென்றே பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுவதும், அதிக நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு அதிக சீட்டுகள் ஒதுக்கப்படுவதும் தமிழ்நாட்டு மக்களை தென்னக ரயில்வே வஞ்சிப்பதாகவே உள்ளது.
நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் மட்டும் தான் இந்த வஞ்சனை என்று பார்த்தோமானால், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்குவதிலும் பெரிய அளவில் வஞ்சனை செய்கிறது தென்னக ரயில்வே. 16792 என்ற எண்ணுடைய பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 சாதாரண முன்பதிவில்லாப்பெட்டிகள் இணைக் கப்பட்டுள்ளன. கேரளாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கக்கூடிய வகையில் 16356 என்ற எண்ணுடன் கூடிய 16 முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரயில் இயக்கப்படுகிறது.16308 என்ற எண் கொண்ட ஆலப்புழா எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் 18 முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு கட்டை வண்டி போல இயக்கப்படுகிறது. 16605 எர்ணாடு எக்ஸ்பிரஸ்சில் 18 பெட்டிகள் சாதாரண பெட்டிகளாக இணைக்கப்பட்டு இருக்கிறது.16630 மலபார் எக்ஸ்பிரசில் 7 முன்பதிவில்லா பெட்டிகள் என இஷ்டத்துக்கு முன்பதிவில்லாத பெட்டிகளை இணைத்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஒரு ரயிலிலும் 4 முன்பதிவில்லா பெட்டிகளுக்கு மேல் இணைக்கப்படுவதில்லை. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ர்ட தொழில்நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட முன்பதிவில்லாத பெட்டிகள் பற்றாக்குறையால் ரயில்களில் ஃபுட்போர்ட் அடித்து செல்லும் காட்சிகளை நாம் அன்றாடம் காண முடியும்.
இதுமட்டுமா? ரயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்துள்ள தென்னக ரயில்வே, அதே ரயிலை 06805, 06806 என்ற எண்களில் கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு கேரளமக்களுக்காக இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் ரயில்வே அதிகாரிகள் சேலத்துக்கு அந்த ரயிலை இயக்கவில்லை. இதனால் 24 சிறிய ரயில் நிலைய பயணிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இப்படி கேரளாவுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு ரயில்களை இயக்கி தேவையான அளவு சீட்டுகள், முன்பதிவில்லா பெட்டிகளை வாரி வழங்கி வரும் தென்னக ரயில்வே தமிழ்நாட்டுக்கு முழுமையான வஞ்சனை செய்வதாக தமிழக மக்களும் ரெகுலர் ரயில் பயணிகளும் வேதனை தெரிவிக்கிறார்கள். தென்னக ரயில்வேயில் பணியாற்றும் அதிகப்படியான கேரள அதிகாரிகள், அரசியல் அழுத்தம் போன்றவற்றால் கேரளாவுக்கு அதிக நிறுத்தங்களும், சீட்களும் கிடைக்கின்றன. கேரளத்தினரும் ராஜபோகமாக அனுபவிக்கிறார்கள். தமிழக மக்களோ ரயில்களில் உட்காரக்கூட இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
தமிழ்நாட்டை தாண்டி செல்லும் இந்த ரயில்களில் சென்னையில் இருந்து ஆரம்பித்து திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சங்ககிரி, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தச் செய்வதோடு, அதிக சீட்டுகளை வழங்கவும், கேரளாவைப்போலவே அதிக முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளை இணைக்கவும் வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இப்படி அதிக நிறுத்தங்களில் நிற்கச்செய்வது மட்டும் இல்லாமல், கேரள ரயில் நிலையங்களுக்கு அதிக சீட்களும் வழங்கப்படுவதாக தமிழ்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டு தண்டவாளங்களில் அதிக தூரம் இயக்கப்பட்டாலும் கேரளாவுக்கென்றே பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுவதும், அதிக நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு அதிக சீட்டுகள் ஒதுக்கப்படுவதும் தமிழ்நாட்டு மக்களை தென்னக ரயில்வே வஞ்சிப்பதாகவே உள்ளது.
நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் மட்டும் தான் இந்த வஞ்சனை என்று பார்த்தோமானால், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்குவதிலும் பெரிய அளவில் வஞ்சனை செய்கிறது தென்னக ரயில்வே. 16792 என்ற எண்ணுடைய பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 சாதாரண முன்பதிவில்லாப்பெட்டிகள் இணைக்
இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்று பெயர் வைத்துள்ள ரயில் கேரளாவுக்குள் திருப்பி விடப்பட்டு ஓடுகின்றன. கர்நாடகாவின் மங்களூ ர் என்ற பெயரில் ஓடுகிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் வடகேரளாவுக்கு இயக்கப்படுகின்றன. இப்படி தமிழ்நாட்டை புறக்கணித்து கேரளாவுக்கு ரயில் இயக்க மட்டுமே தென்னக ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் ஓனம், கிறிஸ்துமஸ், தீபாவளி, ஹோலி, தசரா சபரிமலை ஸ்பெஷல் என அறிவிக்கப்படும் அனைத்து ஸ்பெஷல் வண்டிகளுமே கேரள மக்களின் வசதிக்காகவே திட்டமிட்டு கேரளாவில் அதிக நிறுத்தங்களுடன் இயக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது ஜனவரி, பிப்ரவரியில் வட இந்தியாவில் கும்பமேளாவிற்கு என ரயில் எண்: 06019, 06007, 06008 என 3 ஸ்பெஷல் ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவை மூன்றுமே வழக்கம்போல தமிழ்நாட்டுப்பக்கம் 4 நிறுத்தங்களிலும், கேரளத்துக்கு 12க்கும் மேற்பட்ட நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. இது தவிர தென்னக ரயில்வே இந்த மூன்று ரயில்களையுமே கேரளாவுக்கே கொடுத்துள்ளதால், திருச்சி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு கும்பமேளா ஸ்பெஷல் ரயில் கிடையாது என்பதும் தமிழ்நாட்டுக்கு தென்னக ரயில்வே செய்யும் மிகப்பெரிய வஞ்சனை.
இதுமட்டுமா? ரயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்துள்ள தென்னக ரயில்வே, அதே ரயிலை 06805, 06806 என்ற எண்களில் கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு கேரளமக்களுக்காக இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் ரயில்வே அதிகாரிகள் சேலத்துக்கு அந்த ரயிலை இயக்கவில்லை. இதனால் 24 சிறிய ரயில் நிலைய பயணிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இப்படி கேரளாவுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு ரயில்களை இயக்கி தேவையான அளவு சீட்டுகள், முன்பதிவில்லா பெட்டிகளை வாரி வழங்கி வரும் தென்னக ரயில்வே தமிழ்நாட்டுக்கு முழுமையான வஞ்சனை செய்வதாக தமிழக மக்களும் ரெகுலர் ரயில் பயணிகளும் வேதனை தெரிவிக்கிறார்கள். தென்னக ரயில்வேயில் பணியாற்றும் அதிகப்படியான கேரள அதிகாரிகள், அரசியல் அழுத்தம் போன்றவற்றால் கேரளாவுக்கு அதிக நிறுத்தங்களும், சீட்களும் கிடைக்கின்றன. கேரளத்தினரும் ராஜபோகமாக அனுபவிக்கிறார்கள். தமிழக மக்களோ ரயில்களில் உட்காரக்கூட இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
ஏதோ மேற்கு மண்டல ரயில்பாதை கேரளா செல்லும் வழித்தடமாக இருப்பதால் இந்த அளவுக்காவது ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் தென்மாவட்டங்கள் படும்பாடு மிகவும் கஷ்டம் தான். கோவையில் இருந்து மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் என்றுமே டிக்கெட்டும் இருப்பதில்லை. முன்பதிவில்லா பெட்டிகளில் இடமும் இருப்பதில்லை. இந்த பகுதிக்கு கூடுதல் ரயில் இயக்க பல ஆண்டு கோரிக்கை இருந்தாலும் கூட ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை தாண்டி செல்லும் இந்த ரயில்களில் சென்னையில் இருந்து ஆரம்பித்து திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சங்ககிரி, திருப்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தச் செய்வதோடு, அதிக சீட்டுகளை வழங்கவும், கேரளாவைப்போலவே அதிக முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளை இணைக்கவும் வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.