திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பின் சார்பில் மாதாந்திர தொடர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச செயற்கை கால் கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட 13 மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி மங்களம் சாலை ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
அத்துடன் புதிதாக செயற்கை கால்கள் கேட்டு விண்ணப்பிடிருந்த 14 நபர்களுக்கு அளவீடுகள் செய்யபட்டன.பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் மங்களம் சாலை,
ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்சிகளுக்கு சக்ஷம் அமைப்பின், மாவட்ட தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உபகரண ங்களுக்கான நிதியை வழங்கிய ஸ்ரீதரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பிரேம் பிரகாஷ் சிக்கா பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். செயலாளர் தமிழ்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாக செயற்கை கால்கள் வேண்டி விண்ணப்பம் செய்திருந்த 13 நபர்களுக்கு அளவீடுகள் செய்யப்பட்டன.திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை சிகிச்சை மேற்கொண்டதில் 27 நபர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுள் 6 பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
துளசி பார்மசி உதவியுடன் 24 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சோதனை செய்யப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சக்ஷம் நிர்வாகிகள் ரத்தினசாமி முத்துரத்தினம், ஜெகநாதன், குமார்,நடராஜ் உள்ளிட்டோரும் நற்பணி மன்ற நிர்வாகி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.