அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் தலைமையில் கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
6. 12. 24 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
அதன் படி உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் தலைமையில், சேர்மன் R L வெங்கட்டராமன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் எ. மு. ராஜன் , மாநில செயலாளர்கள் சிவகுமாரன், மோகனசுந்தரம், ரவிகுமார், துணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கலியபெருமாள், உதவி செயலாளர் ஆண்டாள் , ரகு , முன்னாள் வார்டு உறுப்பினர் தனஞ்செயன், கோமதி சங்கர், கௌரி, கோமதி, சுலோச்சனா, குமார், ரகோத்தமன், பீட்டர், தமிழ், ஏழுமலை மற்றும் கழகத்தின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.