ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து,மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம். மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள, குப்பைமேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை சீரமைத் ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வர,தொழில் வரி,குப்பை வரிஆகிய வற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,.வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை 07-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.உண்ணாவிரத போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருக சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,இந்திய தேசிய காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி பாரதிய ஜனதா கட்சி,எஸ்.டி.பி.ஐ, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழக வெற்றி கழகம்,அம்மா மக்கள் முன்னேற்றகழகம்உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அனைத்து வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.