கோவில் விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொதுமக்களோடு பொது மக்களாக தீர்த்த குடம் எடுத்து நடனம் ஆடினார்.
திருப்பூர் அங்கேரி பாளையத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும், இந்த கோவிலில் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம், பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தம் எடுத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர் .
ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் திரு.கே.என்.விஜயகுமார் அவர்கள் பக்தர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு ஏற்றார்போல் கையில் வேப்பிலையுடன் நடனமாடி கோவில் வரை தீர்த்தக்குடம் எடுத்து வந்தார்.
200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருடன் சேர்ந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்பு தீர்த்தங்கள் அனைத்தும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது,
ஆண்டுதோறும் ஊர்வலத்தில் விஜயகுமார் எம்எல்ஏ கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.