ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் காலை முதலே,போராட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்தனர்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் ,மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள, குப்பை மேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் , பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை, சீரமைத்ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வரி,,தொழில் வரி,குப்பை வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,. வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 07-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,இந்திய தேசிய காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி பாரதிய ஜனதா கட்சி,எஸ்.டி.பி.ஐ, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழக வெற்றி கழகம்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடை அடைப்பு நடத்த, வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். உண்ணாவிரத போராட்டம் நடத்த,விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று காலை பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடினர் , உண்ணாவிரத போராட்டத்திற்கு, காவல் துறை அனுமதி வழங்கதாத நிலையில், உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை, சத்தி டிஎஸ்பி தலைமையில், புளியம்பட்டி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புஞ்சை புளியம் பட்டி நகரப் பகுதியில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் காரணமாக, எவ்வித அசம்பாவிதம் நிகழாமல் இருக்க , புஞ்சை புளியம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.