திருப்பூர் மாநகராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வளர்ச்சிப் பணிகள்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி கோரிக்கை

அமமுக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமாரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்15 வேலம்பாளையம், நல்லூர், ஆகிய மூன்றாம் நிலை நகராட்சியும், செட்டிப்பாளையம், தொட்டிபாளையம் நெருப்பெரிச்சல், மண்ணரை. முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் ஆண்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து 60 வார்டுகளையும் நான்கு மண்டலங்களாக்கி ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

159.35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகராட்சி ஒருங்கிணைக்கப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் பழைய மாநகராட்சிப் பகுதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை. இதற்கிடையே மேலும் சில பகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் மாநகராட்சிப் பகுதி விரிவு செய்யப்படும் என்கிற அறிவிப்பு வளர்ச்சிக்குப் பதில் வீக்கத்தையே உண்டாக்கும். ஆகவே   ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
பொதுமக்களை நசுக்கி வரி வாங்கும் வரி உயர்வு என்கிற நிலை மாறி வரிவதிப்பில் நேர்மை என்கிற நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும். பெருமழை வெள்ளம் இவற்றின் பாதிப்புகளால் தமிழ்நாட்டுப்பிற மாவட்டங்களும் மாநகராட்சிகளும் அல்லலும் இன்னலும் படும்போது அந்தளவிற்குப் பாதிப்பு இல்லை என்றாலும் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்
திருப்பூரில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரியும், கரைகளைப் பலப்படுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், நிரந்தரமாக பாதுகாக்க்கவும் வேண்டும்.நொய்யல் ஆற்றின் இருகரைகளையும் சீரமைத்து ஆக்கிரமிப்புகள் அற்ற ஆற்றோரமாக மாற்றியும் தங்கள் அதிகார வரம்பிற்கும் அதையும் தாண்டிய அரசின் அணுக்கத்தையும் பயன்னடுத்தி திருப்பூர் மாநகராட்சியின் அனைத்து இயற்கை மற்றும் செல்வ ஆதாரங்களை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமன திருப்பூர் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:
Previous Post Next Post