திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் மாநகராட்சி நடைபெறும் என மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய சிறப்பு முகாமினை மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டரிந்தார். இதில் கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மேயர் தினேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் தங்களது சொத்து வரி பிரச்சனைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அந்த மனுக்கள் மீது மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்த பின்னர் தான் தமிழக முழுவதும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் திருப்பூரில் மட்டும் 700 சதவீதம் வரி உயர்த்தி விட்டதாக கபட நாடகம் ஆடி வருகிறார்கள். அவர்கள் கூறுவது போல 700 சதவீதம் வரி உயர்த்தப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு முதல் இந்த வரி உயர்வு என்பது அமல்படுத்தப்பட்டது.கடந்த மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்திற்காக சுயநலத்தோடு அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு மன்ற நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர்களுடைய நடவடிக்கையில் அமைந்திருந்தது தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டிதின்படி தான் இந்த முகாம் நடைபெறுகிறது.
திருப்பூரில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.