திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஒன்றிய அதிமுக கழகம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37 ஆண்டு நினைவு தினத்தையோட்டி திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஒன்றிய பேரவை தலைவர் எஸ்.எம் பழனிச்சாமி,ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர்,வர்த்தக அணி தலைவர் சி.எஸ் சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமணி சிவசாமி சரவணன்,சுகன்யா வடிவேல்,துணைதலைவர் ஜெயக்குமார்,முன்னாள் சொசைட்டி தலைவர்கள் பொண்ணுலிங்கம்,மேக்னம் பழனிச்சாமி,மாவட்ட மீனவர் அணி செயலாளர் சாமி கணேஷ்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் குமாரசாமி,வடிவேல், செல்வராஜ்,முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், காளிமுத்து, கேபிள் ரவி,பொன்னுச்சாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமான கலந்து கொண்டனர்.