தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்பாடு உள்ளது, வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை (டிசம்பர் 4) ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோர் கூறியதாவது: இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது பாகிஸ்தானில் போராட்டம் காரணமாக, அந்த நாட்டைப் பிரித்து வங்கதேசம் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பிரதமராக ஷேக்ஹசீனா இருந்தபோது நமது நாட்டுடன் நல்ல உறவாக இருந்தார்கள். அங்குள்ள பயங்கரவாதிகள் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை நாட்டை விட்டு வெளியேற்றினர். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன், அவர்களது வீடுகளும் சேதப்படுத்தப்பட்டது இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஆன்மிகவாதி சின்மயி கிருஷ்ணதாஸ் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக அமைதியான முறையில் வேலை செய்து கொண்டிருந்தார். இது அங்கிருக்கும் பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்குப் பிடிக்காமல் தற்காலிக அரசைத் தூண்டிவிட்டு தேசதுரோக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். அவரைத் தூக்கிலிடவும் திட்டமிட்டுள்ள செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, வங்கதேச ஹிந்து உரிமைக்குழு சார்பில் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அமைதியான முறையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து இந்து இயக்கங்கள், மடாதிபதிகள், ஆனமிகவாதிகள், அனைத்து ஹிந்துக்களின் பங்கேற்க வேண்டும். வங்கதேசத்தில் இதே நிலை நீடித்தால் மத்திய அரசு அந்த நாட்டை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும், மேலும் தமிழகத்தில் சட்டம் போடுங்கள் சீர்குலைந்துள்ளது, தமிழகத்தில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை, குற்றவாளிகளை குறித்து காவல்துறையிடம் தெரிவித்தால நடவடிக்கை எடுப்பதில்லை என்றும்த, மிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது, நடிகை கஸ்தூரியை ஆந்திரா சென்று கைது செய்தவர்கள் ஏன் இசைவாணியை கைது செய்யவில்லை, இந்துக்கள் இதை உணர வேண்டும் என்று பேசினார்.
பேட்டி : காடேஸ்வரா சுப்ரமணியம், மாநிலத் தலைவர், இந்து முன்னணி