திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத் மைக்ரோ லேப்ஸ் சார்பில் மாபெரும் ஆரோக்கிய மேளா எனும் குறைந்த கட்டணத்தில் பல்வேறு இரத்த பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையில் முகாம் நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தன்று துவங்கிய சிறப்பு பரிசிதனை முகாம் டிசம்பர் 15ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாரத் மைக்ரோ லேப்ஸ் மற்றும் பாரத் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குநர் அருண் பாரத் கூறுகையில்:
எங்களது பாரத் ஏஜென்சீஸ் குழுமத்தின் சார்பில் பாரத் மைக்ரோ லேப்ஸ் எனும் அதிநவீன பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் மூலம் அனைவருக்கும் இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு சேவை அடிப்படையில் இரத்தப்பரிசோதனை சிறப்பு முகாமினை, கடந்த நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தன்று துவக்கி எதிர்வரும் டிசம்பர் 15ம் தேதி வரை நடத்தி வருகிறோம். திருப்பூர் பகுதிகளில் வேறு யாரும் தர இயலாத வகையில் இரண்டு பேக்கேஜ்கள் அறிமுகம் செய்துள்ளோம்.
முதல் பேக்கேஜ் (69 வகையான பரிசோதனைகளுடன்) ரூபாய் 499க்கு தரப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு (FBS) 1, மூன்றுமாத சர்க்கரை அளவு (HBA1C) 2, கொழுப்பின் அளவு (LP) 1, இரத்தத்தின் அளவு (HB) 1, கல்லீரல் பரிசோதனை (LFT) 10, சிறுநீரக பரிசோதனை (Kidney) 4, முழு இரத்த அணுக்களின் எண்ணிக்கை (CBC) 21, சிறுநீர் விவரக்குறிப்பு (URINE EXAMINATION) 22 முதலானவை அடங்குகிறது.
இரண்டாவது பேக்கேஜ் (90 வகையான பரிசோதனைகளுடன்) ரூபாய் 1,299க்கு தரப்படுகிறது. இதில், முதல் பேக்கேஜில் உள்ள அனைத்து பரிசோதனைகளுடன், தைராய்டு பரிசோதனை (TFT) 3, தொற்று பரிசோதனை (HBsAg) 1, எலும்பு பரிசோதனை (BONE) 3, நீர்ச்சத்தின் அளவு (ELECTROLYTE) 5, இரும்புசத்து பரிசோதனை (IRON) 2, கணைய பரிசோதனை (PANCREAS) 2, இருதய பரிசோதனை (HOMOCYSTEINE) 1, வைட்டமின் பரிசோதனை (Vit D3, Vit B12) 2 முதலானவை அடங்குகிறது.
இவை தவிர பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஈ.சி.ஜி (ECG), கண் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை போன்றவைகளும் இலவசமாகவே பரிசோதிக்கப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு பரிசோதனை முகாம்களை ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம்.
பரிசோதனைகளை மேற்கொள்ளும் முன்பு அன்றைய காலை உணவு, காபி, தேநீர் ஆகிய எதனையும் எடுத்துக்கொள்ளாமல் பரிசோதனைநிலையத்திற்கு வரவேண்டும். அதிகளவில் வரக்கூடும் என்பதால் அதனை நெறிப்படுத்த முன்பதிவு அவசியம் செய்துகொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் 9626767678, 9888359797, 0421-4271669 என்ற எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.