தமிழகத்தில் டாட்டூ சென்டர் என்ற பெயரில் ஊசி மூலம் பச்சை குத்தும் கடைகளுக்கு தடை விதிக்க கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்தில் டாட்டூ சென்டர் என்ற பெயரில் ஊசி மூலம் பச்சை குத்தும் கடைகளுக்கு தடை விதிக்க கோவை கன்ஸ்யூமர் வைஸ் அமைப்பு செயலாளர் லோகு தமிழக அரசு கோரிக்கை தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும்கோவையி சில ஆண்டுகளாக டாட்டூ என்ற பெயரில் உடலில் அனைத்து பாகங்களிலும் ஊசி மூலம் ரசாயன கலவை மூலம் பச்சை குத்து மையம் அதிகரித்து வருகிறது இதில் தற்போதைய இளைய தலைமுறை முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை தனது உடலில் அனைத்து பாகங்களிலும் மின் ஊசி மூலம் பச்சை குத்துதல் என்ற பெயரில் பல வண்ணங்களில் தனக்கு பிடித்தமான பெயர்கள் மற்றும் பூக்களை ஊசி மூலம் வரைந்து கொள்வது அதிகரித்து வருகிறது‌ இது போன்ற மேற்கத்திய கலாச்சாரம் நமது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக டாட்டூ சென்டர் என்ற பெயரில் கடைகள் திறக்கப்பட்டு அதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் விளையாட்டு வீரர்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர் மற்றும் தங்களது குழந்தைகள் உள்ளிட்டூர் டாட்டூ என்ற பெயரில் ஊசி மூலம் தனது கைகளிலும் தோள்களிலும் மார்புகளிலும் கால்களிலும் ஊசி மூலம் பசசை குத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது இவை முற்றிலும் தோல் சம்பந்தமான உடல் உறுப்புகள் ஆகும் ஆனால் இது போன்ற செயலால் பின் விளைவுகள் தெரியாமல் தற்போது இதனுடைய மோகம் அதிகரித்து வருகிறது அன்றைய பண்டைய காலத்தில் பெண்கள் இடது கை பெருவிரலில் சிறிய அளவில் தனது அடையாளமாக பழங்குடியினர் மக்கள் மத்தியில் பச்சை குத்தும் பழக்கம் ஏற்பட்டு வந்தது இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை அதன் பின்னர் மருதாணி தலை அரைத்து கைகளிலும் கால்களிலும் பூசிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது 
ஆனால் சமீப காலமாக பல்வேறு ரசாயன பொருட்கள் மூலம் எந்த பயிற்சியும் பெறாமல் டாட்டூ சென்டர் என்ற பெயரில் யூடியூப் மூலம் பயிற்சி பெற்று அதிக அளவில் டாட்டூ சென்டர் உருவாக்கி வருகிறது இதனால் பெரும்பாலானவர்களுக்கு எதிர்காலத்தில் தோல் நோய் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வியாதிகள் உருவாகும் நிலை உருவாகி வருவதை அறியாமல் மோகத்தின் அடிப்படையில் டாட்டூ போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது சமீபகாலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் டாட்டூ சென்டர் திறக்கப்பட்டு வருகிறது மேலும் பொருட்காட்சிகள் ஷாப்பிங் மால்களில் சாலையோரம் நடைபாதைகளில் திருவிழாக்களில் திடீரென்று டாட்டூ போடுவதாக கூடி பல வண்ணரசாயன்களை கலந்த ஊசி மூலம் பச்சை குத்தி வரும் போக்கு அதிகரித்து வருகிறது இவை அனைத்தும் மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் ஆகும் ஆனால் இந்த டாட்டூ சென்டர் நடத்துபவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்காமல் இது போன்று சென்டர் நடத்தி பெரும் வருவாய் ஈட்டி வருகிறார்கள் குறிப்பாக ஒரு இன்ச் டாட்டூ குத்துவதற்கு அதிகபட்சமாக 500 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வருகிறார்கள் ஒருவர் தனது உடலில் தனக்கு பிடித்த வண்ணக் கலரில் போடுவதற்கு சுமார் 5000 வரை செலவு செய்கிறார்கள் சமீப காலமாக திருமணம் செய்ய போகும் மணமகள் மற்றும் மணமகன்கள் திருமணமான பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பணிக்குச் செல்லும் பெண்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கூட டாட்டூ சென்டர் அழைத்துச் சென்று சென்று ஊசி மூலம் பச்சை குத்தும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் இதனால் எதிர்காலத்தில் தோல் சம்பந்தமாக என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை கூட அறியாமல் இது போன்ற விபரீதகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதுபோன்ற டாட்டூ சென்டர் நடத்துபவர்கள் மக்கள் நல்வாழ்வு துறையின் கட்டுப்பாட்டிலும் மருத்துவர் சுகாதாரத்துறை அனுமதி பெறாமல் மாநகராட்சி நகராட்சி காவல்துறை ஆகியோர் அனுமதி பெறாமல் டாட்டூசென்டர் என்ற பெயரில் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பமான ஊசி மூலம் பச்சை குத்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இதுபோன்று டாட்டூ சென்டரில் சில நபர்களுக்குநாக்கு கண் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் வண்ண ரசாயணம் மூலம் ஊசி செலுத்தியுள்ளனர் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது எடுத்து திருச்சி காவல்துறை மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் இவ்வாறு டாட்டூஎன்ற பெயரில் உடல் உறுப்புகளோடு ஊசி மூலம் பச்சை குத்தும் பழக்கம் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு சுகாதார துறையும் உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை ஆகியோர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர வாய்ஸ் செயலாளர் நா.லோகு தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் மாநகராட்சி ஆணையர் காவல் துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்
Previous Post Next Post