முன்னாள் முதலமைச்சர் டி. ராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்ராமன் வெளியிடும் இரங்கல் செய்தி
புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சரும் , புதுவை மக்களால் D R என்று அன்போடு அழைக்கப்பட்ட D. ராமச்சந்திரன் அவர்கள் மறைவு புதுவை மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவர் முதல்வராக இருந்த போதும் கூட தனது குடும்பத்தாருடன் அன்போடும் பாசத்தோடும் அதேநேரத்தில் கடுமையாகவும் இருந்தவர். முதன் முதலில் 1969 ஆம் ஆண்டு நெட்டப்பாக்கம் தொகுதியில் வெங்கடசுப்பையா ரெட்டியார் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று முதன் முதலில் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தவர். இரண்டு முறை புதுவை முதல் அமைச்சராகவும் , இரண்டு முறை அமைச்சராகவும் , சபாநாயகராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். நான் D R அவர்களுடன் நெருங்கி பழகி அவருடன் இணைந்து அரசியல் செய்த நாட்கள் சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும். புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது நான் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு போலிசாரால் D R அவர்களுடன் என்னையும் கைது செய்து கடலூர் கேப்பர் குவரரி சிறையில் அடைக்கப்பட்டு எங்களுடன் முன்னாள் முதல்வர் பாரூக் மரக்காயர் , எம் ஜி ஆர் கழக செயலாளர் P K லோகநாதன் ஆகியோர் சிறையில் இருந்தனர். D R வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டை பகிர்ந்து நாங்கள் சாப்பிட்ட நாட்களை இன்றும் எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அப்படிப்பட்ட தலைவர் பிரிந்தது புதுவை மக்களுக்கும் எனக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன் இவ்வாறு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்