போலீஸ் கமிஷனரிடம், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் மனு



அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில் வக்கீல்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் பிரகாஷ் என்பவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடன் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் வரவு- செலவு வைத்திருந்தார். இந்தநிலையில் பிரகாசின் நண்பரான ரமேஷ் கந்துவட் டிக்கு பணம் வாங்கி ஏமாற்றமடைந்தார். ரமேசின் சொத்துகளை சட்டவிரோதமாக பதிவு செய்து தனது பெயரில் பிர காஷ் தரப்பினர் மாற்றம் செய்தனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரகாசின் மேலாளரான சங்கீதராஜன் கொடுத்த புகாரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில் சம்பவத்துக்கு தொடர்பில்லாத முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பெயரையும் இணைத்து கொடுத்துள்ளார். பொய்யாக புகார் கொடுக்கப்பட்ட குணசேகரன் மற்றும் மற்ற நபர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Previous Post Next Post