திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் திருப்பூரில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன் நிறுவனர் இந்திரா சுந்தரம் தன்னலம் பாராமல், எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் சொந்த பணத்தில் பொதுமக்களுக்கு உதவுவதை வாழ்நாள் லடசியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ் விழாவினை ஏழைகளுக்கு உதவும் விதமாகவும், கோலாகலமாகவும் கொண்டாட முடிவு செய்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்ஸோ ஹோம் மற்றும் அன்னால் சிறப்பு பள்ளிஇருந்து 80 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்களுடான் இந்த பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் உடையில் இந்திரா சுந்தரம் பரிசுகள் வழங்கினார்.
காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை பாட்டு நடனம் என குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் இனிப்புகளுடன் பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்கிகளை நிறுவனர் இந்திராசுந்தரம் ஆலோசனையின்படி செயலாளர் கே.ஜி.ராஜாமுகம்மது சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சதீஷ்குமார், யாசின், திவ்யா, விஜி, சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரியாணி விருந்து, கிறிஸ்துமஸ் பரிசுகள் என கோலாகலமாக நடந்த இந்த விழாவில் பங்கேற்ற குழந்தைகள், பெரியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.