ஈரோடு மாவட்டம்,கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்
கோபி பொலவக்காளிபாளையம் to புதுக்கரைப்புதூர் சாலையில்,எல்லமடை - கூகலூர் கிளை வாய்க்காலில் சைபன் பாலம் அருகில் சுமார் 45 - 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் மிகவும் அழுகிய நிலையில் அடையாளம் மற்றும் பெயர் விலாசம் தெரியாத நிலையில் எடுக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோபி போலீசார் இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பொம்ம நாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள குட்டையில் சுமார் 30- 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் பிரேதம் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர் செந்தில்குமார் கடத்தூர் காவல் நிலையம் (பொறுப்பு) மற்றும் உதவி ஆய்வாளர் சத்யன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் பொம்மநாயக்கன்பாளையம் டாஸ்மார்க் கடை அருகில் உள்ள குட்டையில் இறந்து கிடந்த ஆண் பிரேதம் கோபி மேட்டுவளவு, சண்முகத்தின் மகன் கார்த்திக் (32) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவியும் உள்ளார். இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை என அவர்களை தேடி வந்த நிலையில் இன்று கோபி காவல் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் தனது மகன் தான் என அவரது தந்தை சண்முகம் அடையாளம் காட்டியதால் மேற்படி பிரதத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.