தமிழ் நாடு இந்து சேவா சங் அமைப்பின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை
தமிழகத்தில் கடந்த 1998-ம் வருடம் கோயம்புத்தூரில் 58 அப்பாவி மக்களை குண்டு வைத்து கொலை செய்த அல்- உம்மா தீவிரவாத அமைப்பின் தலைவர் பாட்ஷா சிறையில் இருந்து தற்போது பரோலில் வெளியே வந்து இருந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் உயிர் இழந்தார் அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு மற்றும் பலர் கலந்து கொண்டு அவரை தியாகி போல சித்தரிக்கின்றனர். அப்பாவி தமிழர்களைக் கொண்ற தேச துரோகிக்கு இறுதி ஊர்வலம் தேவையா? இது போல் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் இறுதி ஊர்வலம் நடத்துவதால் வருங்கால இளைஞர்களின் எண்ணங்கள் மாறும், அவர்களின் நடவடிக்கை மாறும், இதே போன்ற தேச துரோக வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தியாகியை போல் இளைஞர்கள் உணர்வார்கள், வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக செயல்படக்கூடிய அரசு இது போன்ற தேச துரோகிகளுக்கு உறுதுணையாகவும் , அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மீது என்ஐஏ விசாரணை நடத்தி இவர்களின் நோக்கம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் தீவிரவாதி பாட்ஷா பரோலில் வெளியே இருந்த நேரத்தில் இளைஞர்களுக்கு ஏதாவது அஜந்தா ஒதுக்கப்பட்டுள்ளதா இல்லை அரசியல் கட்சிகளுக்கு ஏதேனும் அஜந்தா ஒதுக்கப்பட்டுள்ளதா என மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து சேவா சங்க அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்