*தேரழந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தூய்மைப் பணி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறையால் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தொடக்கம்! மக்கள் மகிழ்ச்சி!!*
குத்தாலத்தை அடுத்த தேரழந்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஆமருவி பெருமாள் கோவிலின் மேல மடவிளாகம் பகுதியில் உள்ள சாலைக்கு அருகில் மிகப்பெரிய பாம்பு பார்த்து அப்பகுதி மக்கள், பெண்கள் பயந்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்ததரம் அதனைப் பார்த்து அச்சமடைந்த மக்களிடம் பயப்பட வேண்டாம் என்று கூறி உடனடியாக குத்தாலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து, தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் உடனடியாக வருகை தந்து சுமார் 10 அடி நீளம் உள்ள பாம்பினை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டார்கள். பொதுமக்களின் பயத்தை போக்கியதுடன் தேரிழந்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக காடுகள் வளர்ந்து புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடப்பதாகவும், சமூக ஆர்வலரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி புதர்களை அகற்றிடவும் வேண்டுகோள் விடுத்தார். விரைவில் அவற்றை தூய்மை செய்வதாக செயல் அலுவலர் சுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்கள். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் சார்பில் இன்று முதல் முதற்கட்டமாக தேரழந்தூர் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் முழுவதும் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் சுத்தப்படுத்தும் பணியினை ஜேசிபி எந்திரம் மூலம் துவக்கினார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு கோவில் முழுவதும் காடுகளை அழித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதை அறிந்து தேரழுந்தூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தவுடன் இனி பயமின்றி கோவிலுக்கு வர முடியும் என்றும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டோம் என்றும் கூறி, கோயில் நிர்வாகத்திற்கும் முயற்சிகளை மேற்கொண்ட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மற்றும் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.