புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமனுடன் முன்னாள் எம்.எல்.ஏ சாமிநாதன் நேரில் சந்திப்பு புதுவையில் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை

மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களுடன்
 முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் நேரில் சந்திப்பு புதுவையில் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L வெங்கட்டராமன் அவர்களை முன்னாள் எம்எல்ஏ வும் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி முன்னாள் மாநில தலைவருமாகிய சாமிநாதன் அவர்கள் RLV அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும் , எதிர்காலத்தில் புதுச்சேரி மக்களை காப்பாற்றவும் புதுச்சேரியின் தனித்தன்மையை பாதுகாக்கவும் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக கலந்து பேசினோம். புதுவையில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அதனால் புதுவை சீரழிக்கப்படுவது குறித்தும் விரிவாக கலந்து பேசினோம். 
ஆகவே புதுவையில் NR-BJP , காங்கிரஸ் - திமுக , அதிமுக கூட்டணி கட்சிகளை தவிர்த்து வருகிற 26 ஆம் ஆண்டு அமையும் ஆட்சி புதிய உத்வேகத்துடன் செயல்படக்கூடிய ஆட்சியாக அமைய வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் நிலைப்பாடு கொண்டுள்ளது. அதே நிலைப்பாட்டை கொண்டுள்ள முன்னாள் எம் எல் ஏ சாமிநாதன் அவர்களும் எந்த அடிப்படையில் நாங்கள் இணைந்து செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை செய்தோம் . இது சம்பந்தமாக கழகத் தலைமையுடன் கலந்து முடிவெடுப்போம். புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் NR BJP கூட்டணி மைனாரிட்டி மக்கள் விரோத அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து மக்கள் செல்வாக்கையும் இழந்து நித்ய ஆயுசு பூர்ண கண்டமாக எந்த நேரத்திலும் ஆட்சி கவிழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எதிர்கட்சிகள் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள். மைனாரிட்டி அரசாக இருக்கும் இந்த அரசு மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து இந்த கோமாளித்தன மான பொம்மை ஆட்சியை அகற்ற பிரதான எதிர்க்கட்சியான திமுக ஏன் தயங்குகின்றது என்று தெரியவில்லை. இதற்குள்ளாக ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிப் பாடு கொண்டாட்டம் என்று கூறுவார்கள் அது போல புதுவையை கூறு போட்டு விற்பதற்காகவே ஒரு வியாபாரக் கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து புதுவை மக்களை காப்பாற்ற மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பு தேவை படுகிறது. இதற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கின்ற சாமிநாதன் அவர்களின் கருத்தை நான் ஏற்கிறேன். அதற்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கதவு திறந்தே இருக்கிறது. அதற்கு எந்த அடிப்படையில் இணைந்து செயல் படுவது என்று ஆலோசனை செய்தோம். அனைவரும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்து புதுவையை காப்பாற்ற உறுதி ஏற்போம். இவ்வாறு சந்திப்புக்குப் பின்  அறிக்கை வெளியிட்டுள்ளார் 
Previous Post Next Post