*தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று மாவட்ட இளைஞர் திருவிழா என்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .
அதில் சிறப்பான பங்களிப்பு அளித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது .
மேலும் காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு வரும் கேண்டினில் PRS dairy product என்று அச்சிடப்பட்டிருந்த பாதாம் பால் பாட்டிலில் காலாவதியான குளிர்பானம் அடைத்து விற்கப்பட்டது
.
இதில் இன்று அதை எத்தனை மாணவர்கள் வாங்கி பருகினார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் உணவுப் பொருள்கள் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இருக்கிறது ..
கல்லூரி நிர்வாகம் இதை பரிசோதனை செய்வார்களா? என்று தெரியவில்லை மேலும் இதுபோன்ற கல்லூரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறைப்படி சோதனை நடத்துகிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து