மறைந்த தேசிய தலைவர்கள் ஆன நேதாஜி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை தவறாக சித்தரித்து பொதுவெளியில் பேசிய நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நான்காம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் பேட்டி அளித்தார்.
திருப்பூரில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திரப் போராட்ட தியாகி தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரை இழிவாகப் பேசி வன்முறையை தூண்டி சாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய செந்தில் ராஜன் என்பவர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு வழங்கிய காவலர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழக முழுவதும் தேவர் கூட்டமைப்பினரை ஒன்றிணைத்து நான்காம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகள் அனைத்துமே ஆதாயக் குறைகளாக மட்டுமே நடைபெற்று வருவதாகவும் சொத்து பிரச்சனைகள் குறித்து காவல் நிலையத்துக்கு புகார் வரும் பொழுது காவலர்கள் மெத்தனப்போக்கை கைவிட்டு இது போன்ற கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கு பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் தெரிவித்தார்.