தொடரும் பனிப்பொழிவு காரணமாகவும்,ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 3200க்கு விற்பனை!!
திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.இந்நிலையில் தொடர் பனிப்பொழிவு காரணமாகவும் ஆங்கில புத்தாண்டு வருவதை ஒட்டி மல்லிகை,முல்லை பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது.
பனிப்பொழிலிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளது இதனால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது மேலும் தொடர் முகூர்த்தம் என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் 2000க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.3200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ. 1400க்கும்,பச்சை முல்லை 1400ககும், ஜாதிமல்லி 1000க்கும்,மைசூர் காக்கடா 600,உள்ளூர் காக்கடா 1000 க்கும் விற்பனையானது மேலும் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.200 க்கும், பெங்களூர் ரோஸ் வகைகள் 240 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அரளி 320 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு,பண்டிகைகள் வருவதைத் தொடர்ந்து பூக்களின் விலை ஏற்றத்தால் சில்லறை வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்