இது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு வெளியிட்ட செய்தி குறிப்பில்தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள தெரு விளக்குகள் ஆழ்குழாய் கிணறுகள் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்கள் சமுதாயக்கூடம் மருத்துவ மையங்கள் ஆகிய வைகளில் ஊராட்சி மூலமாக மின் பயன்பாடு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது அதே சமயம் ஊராட்சி பராமரிப்பில் உள்ள தெருக்கள் சாலைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் தற்போது ஊராட்சி வளர்ச்சிக்கு ஏற்ப ஊராட்சி சாலைகள் தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதை கருத்தில் கொண்டு அந்த கம்பங்கள் மற்றும் மின் வயர்களை இட மாற்றம் செய்வதற்கு கிராம ஊராட்சி மூலம் அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளிக்கின்றனர் அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மின்வாரியத்தால் மதிப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்யப்பட்டு ஊராட்சிகள் தொகை செலுத்திய பின்னரே மின்வாரியம் பணிகளை மேற்கொள்கின்றன ஆனால் ஊராட்சிகளின் நிதி சுமையை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதி ஊராட்சிகளில் தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்களை இடையூறு ஏற்படா வண்ணம் இடமாற்றம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் போது ஊராட்சிகளின் நிதி நிலையை கருத்தில் கொண்டு ஊராட்சிகளிடம் தொகை வசூலிக்க கூடாது என்று கடந்த 2005 பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை எண் 7 ன்படி உத்தரவு பிறப்பித்தது ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் தற்போது வரை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள தெருக்கள் சாலைகளில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் போது ஊராட்சியில் இடம் மதிப்பீடு தொகை உள்ளிட்டது கட்டணங்களை செலுத்த வேண்டி மின்வாரியம் நிர்பந்திப்பதாக தெரிய வருகிறது ஆகவே தமிழக அரசின் உத்தரவின் படி ஊராட்சிகளிடம் மின்கம்பம் இடமாற்றம் வயல்கள் இடமாற்றம் ஆகிய தொடர்பாக எந்த கட்டணமும் மின்வாரியம் வசூலிக்க கூடாது என்பதை நடைமுறைப்படுத்தி அனைத்து மின்வாரிய அலுவலகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று மின்வாரிய தலைவருக்கு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா. லோகு வேண்டுகோள் விடுத்துள்ளார்