ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீண்ட காலமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு சொந்தமான கட்டிடம் வேண்டும் என வழக்கறிஞர்கள் அரசுக்கு, கோரிக்கை விடுத்ததையடுத்து. தமிழக அரசு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, உழவர் சந்தை அருகே, க.ச.எண் 78/1-ல்,5ல், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சுமார் 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியர், சத்தியமங்கலம் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ள நிலையில், தற்போது கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து,
சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் நலனுக்காகவும், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் நீதிபதிகள் நலனுக்காக, எளிதில் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல கூடிய வகையில்,ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற வளாகம் கட்டித் தரக்கோரி, இன்று காலை நீதிமன்றத்தை புறக்கணித்து சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.கே.ரமேஷ், செயலாளர் வெற்றிவேல் மற்றும் துணைத் தலைவர் ஜாய் செந்தாமரை தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..