முதல்வர் அறிவிப்பு கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 300 கோடியில் நூலகம், 600 கோடியில் அவிநாசி சாலை மேம்பால விரிவாக்க திட்டங்களை அறிவித்தார்.இதனை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநகரச் செயலாளர் தனபால் தலைமையில் இஎஸ்ஐ பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சிஎம்சி பழனிச்சாமி துணைச் செயலாளர் மகேந்திரவர்மன் பொருளாளர் மகேஷ்குமார் மாநகர இளைஞரணி செயலாளர் பூபதி தீரன் தொழில் பேரவை தலைவர் அய்யாசாமி தீரன் தொழில்பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் பகுதி வட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post