பசு மாட்டை மீட்டு காப்பாற்றிய மயிலாடுதுறை தீயணைப்பு துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி

*பசு மாட்டை மீட்டு காப்பாற்றிய மயிலாடுதுறை தீயணைப்பு துறைக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி!* 
மயிலாடுதுறை காவேரிக்கரை பாலம்(லாகடம் ) அருகில் கொட்டப்படும் காய் கனி கழிவுகளை உண்பதற்காக வந்த, பசுமாடு ஒன்று தவறிவிழுந்து உயிருக்கு போராடுவதாக,இரவு ரோந்து போலீசார் அழைத்ததின் பேரில், தீயணைப்பு அதிகாரி, மீட்புக் குழுவினருடன் விபத்திடம் விரைந்து சென்று, உயிருக்கு போராடிய பசுமாட்டினை உயிருடன் மீட்டு ரோந்து போலீசார் வசம் ஒப்படைத்தனர். கருவறை முதல் கல்லறை வரை பால் கொடுக்கும் வாயில்லாத ஜீவன் பசுமாட்டினை வளர்ப்பவர்கள் தெருவில் விட்டாலும் அதன் மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டு காப் பாற்றிய தீயணைப்பு நிலைய அலுவலர், தீயணைப்பு மீட்புப் குழுவினர்கள், மயிலாடுதுறை இரவு ரோந்து காவல் துறையினர்கள் அனைவரையும் மயிலாடுதுறை மக்கள் சார்பில் பாராட்டகிறேன். மேலும் மாடு, ஆடு, குதிரை போன்ற கால்நடைகளை தயவு செய்து தெருவில் திரிய விட வேண்டாம் என்றும் அவற்றால் அன்றாடம் சாலைகளில் ஏற்படும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து முழுமையாக தெரிந்தும், கிஞ்சிற்றும் கவலைப்படாமல் மாடுகளை தெருவிட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்களே நீங்கள் திருந்தப் போவது எப்போது?..... அ.அப்பர்சுந்தரம்.
Previous Post Next Post