ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் , கொமாரபாளையம், சிவியார்பாளையம், அருள்மிகு தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஸ்ரீ கந்த சஷ்டி பெருவிழா, ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் கடந்த 2-ம் தேதி சனிக்கிழமை அன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் கணபதி வழிபாடு, சத்ரு சம்ஹார யாகம், மற்றும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றன.
நிறைவு நாளான, வெள்ளிக்கிழமை (8-ம் தேதி) சுவாமியின் திருக்கல்யாண வைபவம் காலை 9.30 மணி முதல், யாக குண்ட பூஜையுடன் துவங்கி , மதியம் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமியின் திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமிக்கு , அரோகரா முழக்கமிட்டு, பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ப.அனிதா, சத்தி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தே.சிவமணி, மற்றும் கோவில் செயல் அலுவலர் ந.ஜெயப் பிரியா மற்றும் ஸ்ரீதவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர். சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டியினரால், பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.