திருப்பூர் பல்லடம் மூன்று பேர் கொலை வழக்கில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த சாயல்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் தனது மனைவியுடன் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து, வேலை சரியாகப் பார்ப்பதில்லை என தெய்வசிகாமணி அவர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளார். எனவே பாலமுருகனை போலீசார் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சாயல்குடி தம்பதிகளிடம் ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை, இதனை அடுத்து நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஐஜி செந்தில் குமார் டி.ஐ. ஜி.கள் சரவணன் சுந்தர் உமா மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில், ஏ டி எஸ் பி பாலமுருகன் டிஎஸ்பிக்கள் ஆறுமுகம், மாயவன், சுரேஷ், சுரேஷ்குமார் கோகுல கிருஷ்ணன்
மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10 தனிப்படையாக உயர்த்தி ஐஜி செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாநகர், மாவட்டம் மற்றும் ஈரோடு மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு தங்கி இருந்தவர்களின் முகவரி மொபைல் எண்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.