தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு பாராட்டு

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வணிகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வகை தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன இது போன்ற கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு மின்வாரியம் பல்வேறு விதிகளை வகுத்திருந்தது குறிப்பாக இரண்டு வீடுகள் கடைகள் கட்டப்பட்ட வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தது இதனால் சாதாரண பொது மக்கள் மின் இணைப்பு பெற முடியாத சூழல் ஏற்பட்டது இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் தமிழ்நாடு உரிமை என்ற பொது கட்டிடம் விதிகளில் தமிழக அரசு மாற்றம் செய்தது அதில் 8000 சதுர அடிக்குள் கட்டப்படுகின்ற எட்டு வீடுகளுக்கும் வர்த்தக கடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டிட நிறைவு சான்று தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது இதனால் கட்டிட உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அதன் அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன இந்த சூழலில் 50 அடிக்கு மேல் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் வர்த்தக கட்டிடங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஆய்வகத்தின் மின் பாதுகாப்பு சான்று பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் வர்த்தக கட்டிடங்கள் மின் இணைப்பு பெறுவதற்கு தடைகள் ஏற்பட்டது தமிழகத்தில் தற்போது தொழில் வளர்ச்சி அதிகரித்து வரும் சூழலில் கட்டுமான பணிகளும் அதிகரித்து வருவதால் இந்த விதிகளை தளர்த்த வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு உள்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் இதனை பரசீலித்த தமிழக அரசு தற்போது 50 அடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்களுக்கு மின் ஆய்வகத்தின் பாதுகாப்புச் சான்று தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு எளிதில் மின் இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது இந்த உத்தரவை பிறப்பித்த தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு பாராட்டு தெரிவித்துள்ளார்
Previous Post Next Post