நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் பேச்சுவார்த்தை. சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், பழைய பேருந்து நிலையம் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.இந்த நிலையில், சத்தியமங்கலம் நீதிமன்றம் நீண்ட காலமாக, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை மாற்றி, சொந்த கட்டிடத்தில் செயல்பட, சத்தியமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு சத்தியமங்கலம் உழவர் சந்தை அருகே, நீதிமன்றம் அமைக்க, 3 ஏக்கர் நிலம் ஒதுக்க ஏற்பாடு செய்தது. தற்போது, திடீரென சத்திய மங்கலம் அத்தாணி ரோட்டில், கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அருகே, நீதிமன்ற வளாகம் கட்ட, நிலம் ஒதுக்கீடு செய்து, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த, வழக்கறிஞர்கள், சத்தியமங்கலம் உழவர் சந்தை அருகே, நீதிமன்றம் அமைக்கக் கோரி, நேற்று முதல் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.ஆர்.ரமேஷ் தலைமை தாங்கினார் 2 வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இன்று வழக்கறிஞர்களின் கோரிக்கை குறித்து நேரில் கேட்டறிந்தார். உடனே நில ஒப்படைப்பு பிரச்சனை குறித்து, சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை முதன்மை செயலரை அழைபேசியில் அழைத்து பேசி, நீதிமன்ற வளாகம் கட்ட இடத்தை ஒதுக்கீடு செய்த தர கேட்டு, அனுமதியை பெற்று தந்தார். மீண்டும் குறிப்பிட்ட உழவர் சந்தை அருகேயுள்ள இடத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய, தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று தருவதாக உறுதியளித்தார் 


நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர். ஆ.ராசாவின் உறுதி மொழியை ஏற்று, வழக்கறிஞர்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வாபஸ் பெறுவதாக, சத்தியமங்கலம் வழக்கறிஞர் சங்க மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சிவக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த நிகழ்வில், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என், நல்லசிவம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ, சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி மற்றும் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக செயலாளர், வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன் உள்ளிட்டோரும், மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.





Previous Post Next Post