ஈரோட்டில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட பொதுக்குழு

ஈரோட்டில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட பொதுக்குழு ஞாயிறு 17- 11- 2024 தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு அக்ரஹாரம் வீதி ராகவேந்திரா கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வரவேற்புரை சபரிநாதன் கோட்டச் செயலாளர், தலைமை மாவட்ட தலைவர் அஸ்வத் தொழிலதிபர் முன்னிலை ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன் மாநில பொதுக்குழு உறுப்பினர், சபரிநாதன் கோட்டச் செயலாளர். ஆசியுறை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வர மடாலயம் கோவை, சிறப்புரையாற்றியவர்கள் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப்பொதுச் செயலாளர், சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் வாழ்த்துரை வழங்கியவர்கள் வெங்கடேஷ் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர், குமரவேல் மண்டல அமைப்பாளர், ஸ்ரீராம் திருப்பூர் மாவட்ட செயலாளர் நன்றியுரை சபரிநாத் ஈரோடு நகர பொறுப்பாளர் இந்நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.1) நெல்லையில் ஞாயிறு அதிகாலை ராணுவ வீரர்களின் உண்மைக் கதையை படமாக அமரன் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரில் பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி படத்தை தடை செய்வதற்கு சதி செய்ததை இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கிறது 2) தமிழக அரசு நெல்லையில் கடுமையாக சோதனைகள் செய்து உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசியர்களை கைது செய்ய வேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது 3) அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் அவர்கள் நமது நாட்டின் அருகில் உள்ள வங்கதேச நாட்டில் கலவரம் நடந்துபோது சிறுபான்மையான
 இந்துக்கள் பாதிக்கப்பட்ட போது நான் அதிபராக இருந்திருந்தால் அங்கு இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க விடமாட்டேன் என்று கூறியவர் தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்பொதுக் குழு பாராட்டுகிறது .4. இந்து இயக்க சகோதரர்கள் மீது திராவிட அரசு வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு மனித உரிமை மீறி கைது செய்து கொடுமைப்படுத்துவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 5) ஈரோடு கருங்கல் பாளையத்தில் பல ஆண்டுகளாக நடக்கும் மாட்டுச்சந்தையில் கசாப்புக்காக லாரிகளில் சட்ட விதிகளுக்கு புறம்பாக மாடுகளை ஏற்றிக் கொண்டு கொடுமைப்படுத்தும் மாட்டு தரகர்களை கைது செய்து சிறையில் அடைப்பதோடு மாடுகளை வளர்க்க கோசாலை மையத்தில் விட வேண்டும் என்று இப்போது குழு கேட்டுக் கொள்கிறது 6) டிசம்பர் 6 அன்று கோவிலில் வைத்து ராமர்படத்துக்குபூஜை செய்வதற்கு தமிழக அரசு நாமக்கல்லில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இச்செயர் குழு கேட்டுக் கொள்கிறது மாறாக கடந்த ஆண்டு டிசம்பர் 6 தினத்தன்று துக்கதினமாக அறிவித்து போராட முஸ்லிம் அமைப்பினருக்கு மட்டும் போராட்டம் நடத்தஅனுமதி கொடுத்து விட்டு பள்ளிபாளையம் கோவிலில் ராமர் படம் வைத்தது தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் அமைப்பினருக்கு வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு மனித உரிமை மீறி கோட்ட செயலாளர் சபரி நாதனை கைது செய்ததை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மனித உரிமை மீறி கைது செய்த காவல்துறையினர் மீது புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 7) தமிழகத்தில் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதில் இருந்து தடுப்பதற்கு போதைப்பொருள்வைத்திருப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆன்மிக வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிது இப்பொதுக்குழுவில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post