*யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை*
யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் இந்த ஆண்டாவது நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் யானைகள் மற்றும் யாணைப்பாகன்கள் உள்ளனர்.
யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யானை புத்துணர்வு முகாம் கடந்த 2003 முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள யானை களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இருந்து 48 நாட்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம் பட்டியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு தினமும் சிறப்பு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். இதனால் இந்த 48 நாட்கள் யானைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடன் முகாமில் பங்கேற்கும். யானைகள் முகாம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டு முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டன. முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு முறையில் பாதுகாப்பு போடப்பட்டு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் வருகையைக் கண்டறிய 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க 1.50 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின் வேலிகள் அமைக்கப்பட்டன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டன. இதுமட்டுமல்லாமல் பாகன்கள், முகாமில் பணிபுரியும் ஊழியா்கள் ஆகியோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் யானைகள் மற்றும் பாகன்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருந்தனர் என்பது உறுதி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக யானை புத்துணர்வு முகாம் நடைபெறாததால் யானைகள் ஏக்கத்துடன் இருக்கின்றன. அதன் தாக்கத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் யானை மற்றும் இரு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் யானை ஆகியன கோபமடைந்து பாகன்களையே மிதித்து கொன்றுவிட்ட சம்பவம் நடந்து இருக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக யானைகள் புத்துணர்வு முகாமை நடத்தினால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது என்பது உறுதி. விரைவில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம்களை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள யானைகள் மற்றும் யானை பாகஙன்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும் என்றும்