கோவையில் கீதம் அரங்கம் திறப்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை அவிநாசி சாலை அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் கீதம் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அரங்கத்தை சென்னை சேர்ந்த சுதா, ஈரோடு சௌந்தர் சிவராமன் ஆகியோர் திறந்து வைத்தனர் அரங்கத்தின் உணவு கூடத்தை தாமரைசெல்வி, சசி முருகன், அம்பிகா, திருப்பூர் ஆனந்தி துவக்கி வைத்தனர் 75 பேர் அமர் கூடிய வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது இதில் இசை நிகழ்ச்சிகள் திருமண வரவேற்பு வளைகாப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு விற்பனை பிரதிகள் கருத்தரங்கம் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் ஒளிபெருக்கி வசதியுடன் வைக்கப்பட்டுள்ளது மேலும் இங்கு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கு குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரங்கத்தின் உரிமையாளர் நா.லோகு கூறினார் திறப்பு விழாவையொட்டி கீதம் இன்னிசை குழுவின் இசைக் கச்சேரி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பாடகர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி சிறப்பித்தனர் அரங்கத்தை நிர்வாகி நா. லோகு தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு வந்தான் என்ற பாடலை மணிமேகலையுடன் பாடினார் அதேபோல அவரது மனைவி தாமரை செல்வி சிங்காரவேலனே வா வா என்ற பக்தி பாடலை அற்புதமாக பாடினார் இரவு வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பழைய பாடல் புதிய பாடல்கள் பாடிஉற்சாகப்படுத்தினர் மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது கிருஷ்ணமூர்த்தி பார்த்த சாரதி சிவராமன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர் முடிவில் நா. லோகு நன்றி கூறினார்