இந்தநிலையில் மாதன் நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலுக்காக விட்டிருந்த மாடுகளை பிடித்து வர தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டு யானை,கண்இமைக்கும் நேரத்தில், மாதனை துதிக்கையால் தூக்கி, கீழே போட்டு காலால் மிதித்தது. மாதனின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம்பக்கம் கால்நடைகளை, மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து. ஒலி எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் மாதனை மீட்டனர்.ஆனால் அதற்குள் மாதன் உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து கேர்மாளம் வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, மாதனின் உடல் உறவினர் களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வனத்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.