திருப்பூர் ஆண்டிபாளையம் படகு இல்ல கண்காணிப்பு குழு அமைப்பு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது.  ஆண்டிபாளையம் குளத்தில்  ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஆண்டிப்பாளையத்தில் படகு இல்லம் உருவாக்கி சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் முதலமைச்சர்  திறந்து  வைத்தார்.

ஆண்டிபாளையம் படகு இடத்தில் 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், டிக்கெட் கொடுக்கும் இடம், உணவகம், காபி ஷாப்,  குழந்தைகள் விளையாட பூங்கா, குடிநீர் வசதி, கழிவபறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு தற்போது சுற்றுலாத்தலமாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post