தமிழக அரசுக்கு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்து இயக்க கூட்டமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் மூன்று எண் லாட்டரி சீட்டை தடை செய்ய வேண்டிய வலியுறுத்தியும், இந்து சமய அறநிலையத்துறையில் நடக்கும் அநியாயங்களை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், இந்து மத கடவுளை இழிவுபடுத்தக்கூடிய யூடியூப் சேனல்களை முடக்கக்கோரியும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவர் மு.வினோத் அகில இந்திய சத்திய சேனா அமைப்பின் தேசிய தலைவர் மாஸ்டர் வசந்தகுமார் ஜெய் சிவசேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் மாடம்பாக்கம் செந்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மகளிர் அணி பொறுப்பாளர் சாவித்திரி மற்றும் இந்துமதம் முன்னேற்ற முன்னணியின் நிர்வாகிகள் தமிழ்நாடு இந்து சேவா சங்க அமைப்பின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் மற்றும் அனைத்து இந்து இயக்க மாநில, மாவட்ட நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Previous Post Next Post