பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அலுவலகம் பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் 24/11/2024 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை மாவட்ட செயலாளர் முருகன், வரவேற்புரை மோகன் பூசாரி பொள்ளாச்சி மாவட்ட பொருப்பாளர், ஆசியுரை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வரா மடாலயம் கோவை, சிறப்புரை மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், வாழ்த்துரை ரங்கசாமி கோவை மண்டல இணை அமைப்பாளர் பூசாரிகள் பேரவை, கோவிந்தராஜ் கோட்ட அமைப்பாளர் பூசாரிகள் பேரவை, முத்துகுமார் பிஜேபி ஒன்றியதலைவர், சிவக்குமார் விவேகானந்தர் பேரவை, நன்றியுரை சரவணக்குமார் பூசாரி பொள்ளாச்சி நகர தலைவர்
நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் பேசியதாவது நமது விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாகவும் 1990 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஜாதியை சேர்ந்தகிராம கோவில் பூசாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அது தற்போது வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் தமிழகத்தில் திராவிட கட்சிகள் தற்போது சில பூசாரிகளுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு தான்தான் அனைத்து சாதிகளும் அர்ச்சகராகலாம் என்று திட்டத்தை கொண்டு வந்ததுஎன மக்களை ஏமாற்றி வருகிறது இதை மறுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை விசுவ இந்து பரிசத் செயல்படுத்தி வருகிறது என்று எடுத்து கூறினோம் இதே போல் நமது சமுதாயத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் கலந்து கொண்டதலைவர்களில் முத்துராமலிங்கத் தேவர் சுந்தரலிங்க குடும்பனார் வ உ சிதம்பரம் பிள்ளை தீரன் சின்னமலை கவுண்டர் குயிலி மருது சகோதரர்கள் போன்றவர்கள் மிகச்சிறந்த முருகன் சிவன் கடவுள் பக்தர்கள் ஆவார்கள் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கு தான் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர அவரவர் ஜாதிக்காக பாடுபட்டது கிடையாது ஆனால் திராவிட அரசு அவர்களை ஜாதி தலைவர்கள் போல் மக்களிடத்தை காட்டி ஏமாற்றி வருவதை மக்களுக்கு புரிய வைத்தோம் அதேபோல் ஜாதி பிரச்சனையானது நமது நாட்டில் கஜினி முகமது 17 முறை படை எடுத்து தோற்று பிறகு 18 வது முறை ஜெயிப்பதற்கு ஜாதி பிரச்சனை தூண்டித்தான் ஜெயித்தார் என்பதை தெரியப்படுத்தினார். தமிழகத்தில் சமூக நீதி தாத்த தலைவர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் ஆனால் உண்மையிலேயே சமூக நீதிக்காக போராடிதாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அழைத்துச் சென்றவர்கள் முத்துராமலிங்கத் தேவர், வைத்தியநாத ஐயர், ராமசாமி படையாட்சி போன்றோர் ஆவார்கள் . தமிழகத்தில் ஈவெ ராமசாமி நாய்க்கர் எப்போதாவது தாழ்த்தப்பட்ட மக்களை ஏதாவது ஒரு கோவிலுக்குள் கூட்டிச் சென்று இருப்பாரா என்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது நமது பாரத நாட்டில் இந்து மத பற்றாளருமான ஆன்மீகவாதி மோடி ஆட்சியில் தான் உலக நாடுகள் பாரத நாட்டை உலக வழிகாட்டியாக சொல்வதோடு பல்வேறு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை பாரத பிரதமர் தான் தீர்க்கும் வல்லமை உடையவர்கள் என்று அந்தந்த நாடுகளை கூறுவதற்கு காரணம் மிகச்சிறந்த தேசப்பற்றாளர் அது போன்ற தேசப்பற்றாழை உருவாக்கியது நமது அமைப்புதான் என்று மக்களுக்கு தெளிவுரை எடுத்து உரைக்கப்பட்டது மேலும் பொள்ளாச்சியில் பிரபலமான ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அடுத்த மாதம் நடக்கும் கும்பாபிஷேக விழா அந்த கோவிலின் ஆகமவிதிப்படி நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கும் அறநிலைத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டதுஅதேபோல் கோயில் பூசாரிகளுக்கு தட்டில் விழும் காணிக்கையை அவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்றும் தட்டிப் பறிக்கும் செயலில் இனி தமிழக அறநிலைத்துறை செயல்படுத்த கூடாது என்று எச்சரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மதுக்கரை ஸ்ரீராம், விஜயகுமார், பாலசுப்பிரமணியம்,வடக்கு ஒன்றிய நிர்வாகிகளான கவிபாரதி, வாசு, சிவக்குமார்,மகளிர் அணியினர் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.