மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை இணைக்கும் மேம்பாலத்தை உடனடியாக சீரமையுங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள்

பாலத்தை சீரமையுங்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் 

கோவை மேட்டுப்பாளையம் நகரத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே 1984 ஆம் ஆண்டு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநில மக்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதற்கு இந்த பாலம் தான் பிரதான வழியாகவும் இணைப்பு பாலமாகவும் உள்ளது. இந்த பாலத்தின் மீது தான் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் தற்போது கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து வெறும் கம்பிகளுடன் எலும்பு கூடுமாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாலத்தின் நடைமேடை மிகவும் பழுதடைந்து பள்ளமேடுகளாகவும் ஆங்காங்கே உடைந்தும் காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் பாலத்தில் இருந்து மழை நீர் வெளியில் செல்ல முடியாமல் பாலம் முழுவதும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதேபோல் சிறு கனரக வாகனங்கள் சென்றாலும் பாலம் தூரிப்பாலம் போல் ஊசலாட்டம் ஏற்படுகிறது. இது பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.மேலும் பல வருடங்களாக பாலத்தில் இருபுறங்களும் பராமரிப்பு செய்யாததால் பாலத்தின் இருபுறமும் புதர் மண்டி செடி கொடிகளுடன் விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது ஆகவே அதிக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பெறும் இந்த பவானி ஆற்று பாலத்தின்
தன்மையை தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி மிகவும் பழுதடைந்து அபாயகரமாக காட்சியளிக்கும் பவானி ஆற்றுப்பாலத்தை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மேட்டுப்பாளையம் பகுதி வாழ் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது அரசு கவனத்தில் கொள்ளுமா?
Previous Post Next Post