கோவை சூலூருக்கு உட்பட்ட பகுதிகளில் ஐடிபிஎல் ஆயில் கம்பெனி நிறுவனத்தால் கோவையில் இருந்து பெங்களூருக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்ல விவசாய நிலங்களுக்கு இடையே குழாய் பதிக்க முயற்சித்து வருகிறார்கள் இதில் மொத்தமுள்ள 320 கிலோமீட்டரில் கோவையில் இருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டருக்கு மட்டுமே விவசாய நிலங்களுக்குள் கொண்டு செல்கிறார்கள் மீதமுள்ள 250 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையோரமாக கொண்டு செல்கிறார்கள் எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையான கோவையில் இருந்து முத்தூர் வரையிலும் சாலையோரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் மனுதரப்பட்டது அவர்களும் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறையினரை அழைத்து வந்து விவசாயிகளை அச்சுறுத்தி ஐடிபிஎல் நிறுவனத்தினர் விவசாகளின் எதிர்ப்பை மீறி குழாய் பதித்தனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரை சென்று பார்த்த பொழுது குழாய் பதிக்கும் பணியை நிறுத்த முடியாது என்று கூறிவிட்டார் இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இரவு 10 மணி அளவில் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சூலூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சூலூர் கலங்கள் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரவில் அடைத்து வைத்துள்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காணாமல் உலகுக்கு உணவளிக்கும் உழவனை அடைத்து வைத்துள்ள தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்