ஈரோட்டில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட பொதுக்குழு ஞாயிறு 17-11-2024 தேதி காலை 10 மணிக்கு ஈரோடு அக்ரஹாரம் வீதி ராகவேந்திரா கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வரவேற்புரை வெங்கடேஷ் மாநகர் மாவட்ட தலைவர், தலைமை அஸ்வத் தொழிலதிபர் மாவட்ட தலைவர், முன்னிலை ஆடிட்டர் கஸ்தூரி ரங்கன் மாநில பொதுக்குழு உறுப்பினர், சபரிநாதன் கோட்டச் செயலாளர், ஆசியுறை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வர மடாலயம் கோவை, சிறப்புரையாற்றியவர்கள் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப்பொதுச் செயலாளர், சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர் வாழ்த்துரை வழங்கியவர்கள் குமரவேல் மண்டல அமைப்பாளர், ஆடிட்டர் குருநாதன் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர்,ஸ்ரீராம் திருப்பூர் மாவட்ட செயலாளர், நன்றியுரை மணியன் ஈரோடு மாவட்ட இணை அமைப்பாளர் இந்நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், சேதாரமடைந்த கிராம கோவில்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கி புதுப்பிக்க தமிழக அரசு உதவ வேண்டும், கிராம கோவில் பூசாரிகளுக்கு தொகுப்பூதியம் 4000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்யாக உயர்த்தி வழங்க வேண்டும், கிராம கோவில் ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ஓய்வூதிய தொகை மாதம் 10 ஆயிரம் வழங்க வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் இறந்தால் அவர்களுடைய ஓய்வூதிய தொகை
அவர்களது மனைவிக்கு வழங்க வேண்டும் மற்றும் ஈரோட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் கோவில் பரம்பரை பூசாரியை கோவிலில் இருந்து வெளியேற்றியதை அறநிலையத்துறை ரத்து செய்து மீண்டும் அதே கோவிலில் பரம்பரை பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் புகழ் பெற்ற ஈரோடு மாரியம்மன் கோவில் ஆக்கிரமிக்கபட்ட சொத்துக்களை அரசு மீட்க வேண்டும் என்றும் நாமக்கல் பள்ளிபாளையம் ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அரசு உடனே மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தற்போது இடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலை புதிதாக கட்டுவதற்கு மாற்று இடம் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இப்பொதுக்குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்