சூலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆலோசனைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் சூலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள முத்துகவுண்டன் புதூரில் உள்ளது சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த வழித்தடம் உள்ளது தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில்வே தடம் வழியாக பயணிக்கின்றன பயணிகள் ரயில், சரக்கு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதன் வழியாக செல்கின்றன சூலூர் ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், சண்முகம், கார்த்திகேயன், பூங்கொடி ஆகியோர் சூலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டனர் ரயிலுக்கு நின்ற பயணிகளிடம் குறைகளை கேட்ட பொழுது மழை வெயிலுக்கு ஒதுங்க கூட மேற்கூரை இல்லை என்றும் குடிப்பதற்கு குடிநீர் இல்லை சிறுநீர் உபாதைகள் கழிக்க எந்த வசதியும் இல்லை என்றும் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் (எண் :16321) மாலையில் நிற்பதில்லை எனவும் திருச்சி செல்லும் ரயில் (எண் :16844) காலையில் ஸ்டேஷனில் நின்று செல்வதில்லை என்றும் மேலும் கோவை வழியாக சேலம் செல்லும் மெமு ரயில் நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர் இதைக் கேட்ட ரயில்வே குழுவினர் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக சூலூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள குறைகளை தீர்க்க உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து தீர்வு பெற்று தருகிறோம் என்று சூலூர் ரயில்வே ஆலோசனை குழுவினர் உறுதியளித்தனர்