புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக புதுவை விடுதலை நாள் விழா மற்றும் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்
1.11.24 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதுவையின் விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தான கீழூர் கிராமத்தில் கீழுர் மணி மண்டபம் அருகில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையில் கழகத்தின் சேர்மன் R.L வெங்கட்டராமன் முன்னிலையில் நடைப்பெற்றது. கழகத்தின் ஆண்டுவிழா தொடங்குவதற்கு முன்பாக புதுச்சேரி விடுதலை தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.இராமதாஸ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கழகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை கழக சேர்மன் R.L வெங்கட்டராமன் ஏறிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் கழகத்தின் ஆண்டறிக்கை வெளியிட , செயற்குழு உறுப்பினர்கள் P. சுப்பிராமணியன் மற்றும் டாக்டர் சுப்ரமணியன் நாயுடு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கழகத்தின் சேர்மன் R L வெங்கட்டராமன் நோக்க உரையாற்றினார்.
கழகத்தின் பொதுச்செயலாளர் எ.மு.ராஜன் புதுச்சேரி வரலாற்று பற்றிய உரையை நிகழ்த்தினார். அணி துணைத்தலைவர் தனஞ்செயன் வரவேற்புரை நிகழ்த்த மாநில செயலாளர் K.மோகனசுந்தரம் இனைப்புரை வழங்கினார்.
மாநிலத் துணை தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ரவிகுமார் , உதவி செயலாளர் இத்தயவேந்தன், அணி தலைவர்கள் G.C சந்திரன் , விமலா பெரியாண்டி மற்றும் காரைக்கால் மாவட்டத்தலைவர் கணபதி சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கழகத்தலைவர் பேராசிரியர் மு.இராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்பொழுது கழகம் ஆரம்பித்து கடந்த ஒரு ஆண்டு காலமாக மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஆறு கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியும், மாநில அந்தஸ்தை மத்திய அரசு கைவிட்ட போதும், தொடர்ந்து மாநில அந்தஸ்து கிடைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும் புதுவை அரசுக்கு மாதிரி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டும் மக்கள் நல பிரச்சனைகளை மாநில அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று , எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலைகளை மக்கள் நலன் கருதி மக்கள் முன்னேற்றக்கழகம் செய்துள்ளதை குறிப்பிட்டு பேசினார்.
முடிவில் உதவி செயலாளர் ஆண்டாள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார் .
விழாவிற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர்கள் சிவகுமாரன் , பரந்தாமன், முன்னாள் வார்டு உறுப்பினர் , p தனஞ்செயன் , இணை செயலாளர் GD இளங்கோவன், துணை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். கூட்டத்தில் துணை செயலாளர் ராதாகிருஷ்ணன்,,சங்கர், விஜயகுமார், ரகோத்தமன், வழக்கறிஞர் கார்த்திகேயன் , கோமதி, காலாப்பட்டு குமார், தேவராசு , ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துக் கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர்