திருப்பூர் மாவட்ட கபாடிக்கழகம் சார்பில் தேசிய போட்டியில் சாதித்த தமிழக பெண்கள் கபாடி அணிக்கு ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை

 17 வயதுக்கு உட்பட்ட  பள்ளி மாணவிகளுக்கான தேசிய அளவிலான  கபாடிப் போட்டி மத்திய பிரேதசம் மாநிலத்தில்  நடைபெற்றது. இதில் தமிழக அணி இறுதிப் போட்டி வரை சென்ற தமிழ்நாடு பெண்கள் அணி  இரண்டாம் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற தமிழக பள்ளி மாணவிகள் அணிக்கு பாராட்டு விழா திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகத்தில் நடைபெற்றது. 


விழாவிற்கு மாவட்ட கபாடிக் கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கபாடிக் கழக செயலாளரும், மாநில
கபாடிக் கழக பொருளாளருமான ஜெயசித்ரா  ஏ. சண்முகம்  முன்னிலை வகித்தார்.  பொருளாளர் கன்னிமார்ஸ் ஏ. ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியாளர், தலைமை மேலாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு நினைவுப் பரிசும், ஊக்கத் தொகையாக 15 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.75,000 வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கபாடிக் கழக துணைச் சேர்மன் எஸ். முருகானந்தம், துணைத் தலைவர் கொ. ராமதாஸ், செய்தித் தொடர்பாளர் சு. சிவபாலன், பள்ளி விளையாட்டு ஆய்வாளர்  மகேந்திரன், புரவலர்கள்  மகாலட்சுமி ரத்தினசாமி,  பிரேமா மணி, நியூ பாலிபேக்  சண்முகம், தம்பி வெங்கடாச்சலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட தமிழக அணிக்கு பயிற்சியாளராக நத்தக்காடையூர், காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்  பிரதீப் கமல், தலைமை மேலாளராக முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன், மேலாளராக காங்கேயம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை   ரஞ்சனி ஆகியோர் செயல்பட்டனர். அணித் தலைவராக செல்வி கார்த்திகா செயலாற்றினார்.
இரண்டாம் இடம் பெற்ற தமிழக பெண்கள் அணியில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி எவரும் இல்லையென்றாலும், கபாடி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு செயல்படும் திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகம் மேற்கண்ட 15 மாணவிகளுக்கு, பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தி நினைவுப் பரிசும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்
தொகையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post