*வானகிரி நூலகத்திற்கு 10 ஆயிரம் மதிப்புள்ள புக் ஷெல்ப் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் முயற்சியில் வழங்கப்பட்டது!*
மயிலாடுதுறை அடுத்த பூம்புகார் வானகிரி மீனவர் கிராமத்தில் உள்ள ஊர் புற நூலகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைப்பதற்கான புக் ஷெல்ப் எனப்படுகின்ற புத்தக அலமாரி இல்லாமல் தற்போது பெய்து வரும் மழையால் சுவரில் நீர்கோர்த்து புத்தகங்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தனது நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து கென்யாவில் பணியாற்றி வரும் மல்லியம் வெங்கடேஷ் மற்றும் நண்பர்களின் நிதி உதவியுடன் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 3 புக் ஷெல்ப்புகளை வானகிரி நூலகத்திற்கு வாங்கிக் கொடுத்தார். அதனை நூலகர் சுதா நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மற்றும் நிதி அளித்து உதவிய வெங்கடேஷ் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். எதற்கெடுத்தாலும் அரசை மட்டுமே நாம் நம்பி இல்லாமல் பொதுமக்களின் நல்லாதரவோடு அரசு அலுவலர்கள் தத்தம் அலுவலகத்திற்கு தேவையான இது போன்ற உதவிகளை பெற்று அரசு சொத்துக்கள் வீணாகாமல் பாதுகாத்து தொடர்ந்து பல்லாண்டுகள் அதன் பலன் எதிர்கால மக்களுக்கு கிடைத்திட அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், வானகிரி நூலகம் போன்று தமிழ்நாட்டில் சுமார் 6000 நூலகங்கள் உள்ளன என்றும், அந் நூலகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மின்சாதன பொருட்கள் போன்றவற்றை பொதுமக்களாகிய நாம் கொடுத்து உதவ வேண்டும். மேலும் நூலகங்களில் புறவலர்களாக ரூபாய் ஆயிரம் செலுத்தி அனைவரும் சேர்ந்து நூலக வளர்ச்சிக்கு உதவிட முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தனது வேண்டுகோளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வானகிரி வீரமணி, பத்மப்பிரியா உட்பட வானகிரி கிராமத்தின் மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்றார்கள்.