மயிலாடுதுறை திருவிழந்தூர் CUB அருகில் கிடந்த முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அனுப்பி வைத்தார்

திருவிழந்தூர் CUB அருகில் கிடந்த முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அனுப்பி வைத்தார்

மயிலாடுதுறை திருவிழந்தூர் சிட்டி யூனியன் வங்கி அருகில் படத்தில் காணப்படும் தாடியுடன் கூடிய பெரியவர், மழையில் நனைந்து பள்ளத்தில் விழுந்து மிகவும் சோர்வாக கிடக்கிறார் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் அவர்களிடம் வங்கி ஊழியர் தெரிவித்து உதவிட கோரியதையடுத்து உடனடியாக அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜனதாரகு, குரு சங்கர், லவ்லிகுமார், போட்டோ குருமூர்த்தி ஆகியோருடன்நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட முதியவரிடம் விசாரித்த பொழுது, முன்பு மாட்டு வண்டி ஓட்டியதாகவும், கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறியவர் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் உடனடியாக இவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். இவரைப் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருப்பின் உடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல கேட்டுக்கொள்கின்றோம் மேலும் அப்பகுதியைச் சார்ந்த திமுக பிரமுகர் தாடி மணி, பாதிக்கப்பட்ட முதியவருக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை செய்து தைரியம் மூட்டினார் தயவுசெய்து இதுபோன்று வயதான காலத்தில் பெரியவர்களை யாரும் தவிக்க விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post