புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி திருபுவனையில் ஆறாம் கட்ட போராட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி திருபுவனையில் ஆறாம் கட்ட போராட்டம் சிறப்புரை கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் 
எழுச்சி உரை சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும் , உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், தொடர் போராட்டங்களை மக்கள் முன்னேற்ற கழகம் நடத்திக் கொண்டு வருகிறது.
 இதுவரை ஐந்து கட்டங்களாக உழவர்களை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், வில்லியனூர் , பாகூர், ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக ஆறாம் கட்டமாக ஓர் எழுச்சிப் போராட்டம் திருபுவனை திருவண்டார் ரோட்டில் சின்னபட்டுவில் (15. 10.2024) செவ்வாய்க்கிழமைகாலை 10.00 மணிக்கு நடைபெற்றது. முன்பாக கழகத்தின் துணை செயலாளர் சுப்ரமணி மற்றும் பிரகாஷ் தலைமையில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக போராட்ட களத்திற்கு வந்தனர். போராட்டத்திற்கு முன்பாக கழகத்தின் Towards ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் மு. ராமதாஸ் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இப்போராட்டத்திற்கு முன்னாள் வார்டு உறுப்பினர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலாளர் இதயவேந்தன் இணைப்புறை ஆற்றினார். 
துணைச்செயலாளர் ரகுபதி, ராதாகிருஷ்ணன், அணி தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில செயலாளர் பரந்தாமன் போராட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் மாநில பொதுச்செயலாளர் எ.மு.ராஜன் நோக்க உரை ஆற்றினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் கருத்துரை ஆற்றினார். கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் எழுச்சி உரை ஆற்றினார். அப்போது புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததை கண்டித்து மக்கள் முன்னேற்ற கழகம் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. மூன்று கட்ட தேர்தலில் பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவித்து நடத்துகிறது . ஆனால் உள்ளாட்சி தேர்தல் மட்டும் ஏன் நடத்த வில்லை என்று கேள்வி எழுப்பினார் . 
கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசுகையில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விட்டால் பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இனிமேலாவது புதுவை அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறப்புரையாற்றினார் போராட்டத்தில் கழகத்தின் துணை தலைவர் நித்தியானந்தன், மாநில செயலாளர் ரவிகுமார்,குமார், வக்கீல் கார்த்திகேயன், கோமதி, கௌரி, சுலோச்சனா,வசந்த தேவராசா, ராஜேந்திரன், ஜேயப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில உதவி செயலாளர் ஆண்டாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 போராட்டத்தில் அணித்தலைவர்கள் , கழக உறுப்பினர்கள், மற்றும் ஊர் மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர்.
Previous Post Next Post